விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்

by Admin / 14-12-2021 06:46:35pm
விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்

விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்ராமதாஸ்அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,"நாட்டில் 49 கோடி பேர்,மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கு மேலானோர் வைட்டமின்-டி குறைபாட்டுடன் உள்ளனர். இது,நோய் எதிர்பு சக்தியை குறைத்து விடும் என்பதால்,அனைத்து வகையான தொற்று நோய்களும்,மனிதர்களிடத்தில் மிக எளிதாக தொற்றிக்கொள்ளும்,  வைட்டமின் டி  உணவின் வாயிலாககிடைக்காது.சூரிய ஓளி உடலில் படும்படி செய்வதும்,வயது முதிர்தவர்கள் கூடுதலாக,இதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் தான் தீர்வு.நீரழிவு நோய் போல ,வைட்டமின்-டி குறைபாடு வரும் காலத்தில் மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது.இதைத்தடுக்க,தமிழக அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக,பள்ளிகளில் வாரத்திற்கு ஐந்து பாட வேளைகள்,விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மாலை வெயிலில் மக்கள் நடைபயிற்ச செய்வதற்கு  ஏற்ற வகையில்பூங்காக்களும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் திடல்களும் அதிக எண்ணிககையில்  அமைக்க வேண்டும். வைட்டமின்-டி குறைபாட்டின் தீமைகள்,அதைப்போக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய,மாநில அரசுகள்  மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via