ஊத்துமலை ஏந்தலுரில் குளத்து நீரை திருப்பி விட்டும் நிரம்பாத கிணற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்ய வலியுறுத்தல்.

by Editor / 14-12-2021 09:41:05pm
 ஊத்துமலை ஏந்தலுரில் குளத்து நீரை திருப்பி விட்டும் நிரம்பாத கிணற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்ய வலியுறுத்தல்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக ஏரி குளங்கள் கிணறுகள் வேகமாக நிரம்பிய நிலையில் ஒரு கிணறு மட்டும்  அதிசயமாக பார்க்கப்பட்டது.அந்த கிணற்றில் தண்ணீர் எவ்வளவுதான் பாய்ந்தாலும் கிணறு நிரம்பவேயில்லை.இதனால் ஆச்சரியம் உடன் பொதுமக்களால் பார்க்கப்பட்டு வந்த அந்த கிணற்றை  ஐஐடி கல்லூரி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடைகிடைக்காத நிலையில்  நிலையில் இந்த கிணற்றை போன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை ஏந்தலூர் கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகராஜ் என்ற  விவசாயிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் அறுபத்தி ஆறு அடி ஆழம் கொண்டகிணற்றின் நீர் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தார். 

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏந்தல் ஊர் கிராமம் அருகே உள்ள கல்வெட்டு குளம் முழுவதுமாக நிரம்பி முருகராஜ்  விவசாய நிலத்திற்குள் வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலத்திற்குள் தண்ணீர் சூழ்ந்தாலும் விவசாய நிலத்தின் மையப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் பாய்ந்து கொண்டே இருந்துவருகிறது... ஆனால்  கிணறுதான் நிரம்பியதாக இல்லை.கிணற்று நீர் பாதி அளவை தாண்டாமல்  தொடர்ந்து எப்பொழுதும் போல இருப்பதைப் போன்றே காணப்படுகிறது. இந்த அதிசய கிணற்றுக்குள் செல்லும் குளத்து நீர் எங்கே செல்கிறது என்று தெரியாமல் அனைவரும் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்து சென்றவண்ணமுள்ளனர்.அதே சமயம்  இந்த கிணறு ஒரு விவாதப் பொருளாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கிணற்றிற்கு குளத்து நீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் குளத்திலிருந்து செல்லும் நீரில் மீன்களும் அடித்து செல்லப்பட்டு வருகின்றன.அந்த மீன்கள் அனைத்தும் கிணற்றில்  இன்று காலை முதல் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இந்த கிணறுதான் இப்போதைக்கு இந்த வட்டாரத்தில் பரப்பரப்பான செய்தியாக உலாவருகிறது..

 ஊத்துமலை ஏந்தலுரில் குளத்து நீரை திருப்பி விட்டும் நிரம்பாத கிணற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்ய வலியுறுத்தல்.
 

Tags :

Share via