தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் அறப்போராட்டம்

by Editor / 15-12-2021 02:18:43pm
தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும்  அறப்போராட்டம்

தமிழ்நாட்டில் மட்டும் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் தடை தொடர்ந்து இருந்து வருகின்றது கள் தடையை நீக்கக் கோரி, கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதை பொருளோ, மதுவோ அல்ல. கள் ஒரு உணவு. கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலகளாவிய நடைமுறையும் ஆகும்.

6 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பூரண மது விலக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு சாராயத்திற்கு, இறக்குமதி மதுக்களுக்கு, இந்தியத் தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுமதுவிலக்குக் கொண்டு வந்த பிறகு குற்றங்களும், விபத்துக்களும் வெகுவாக குறைந்து இருப்பதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறி வருகிறார். பீகாரை பின்பற்றி தமிழ் நாட்டிலும் மது விலக்கு மற்றும் மதுக் கொள்கையினை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டில் மட்டும் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. கள் தடையை நீக்கக் கோரி, கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ‘‘கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள்தான்’ என நிரூபிப்போருக்கு ரூ.10 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று நடக்கும் விதமாக வருகிற ஜனவரி 21-ந் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி உள்நாட்டிலும், உலகளவிலும் சந்தைப்படுத்துவது என கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொள்வோரை ஒன்றிணைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படும்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்கள் நல அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து கள்ளுக்கு விதித்து இருக்கும் 33 ஆண்டு கால தடையை நீக்கி நடப்பு (2021-ம்) ஆண்டு முடிவதற்குள் அறிவிக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு அரசு கள் தடையை நீக்கி அறிவிக்காமல் போனால் திட்டமிட்டபடி வருகிற ஜனவரி 21-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via