கம்பம் மெட்டு மற்றும் குமுளி மலைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.

by Editor / 18-12-2021 11:42:56pm
 கம்பம் மெட்டு மற்றும் குமுளி மலைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக  நடைதிறக்கப்பட்டு இனமும் 45ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியளிக்கபட்டுள்ளது.இதன்காரணமாக சபரிமலை நோக்கி ஏராளமான ஐயப்பபக்தர்கள்  வாகனம் தேனியில் இருந்து சபரிமலை நோக்கி செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும், சபரிமலையில் தரிசனம் முடித்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் குமுளி வழியாக மட்டுமே தமிழகம் வர வேண்டும் என்றும் தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துஉள்ளது.மேலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் விபத்தில்லா சாமிதரிசனம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய திட்டம் அமல்படுத்தபட்டுஉள்ளது. இன்று முதல் கம்பம்மெட்டு மற்றும் குமுளி மலைச்சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Increase in the number of vehicles of Ayyappa devotees

Share via