மலர் செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்

by Admin / 24-12-2021 12:53:33pm
 மலர் செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்

ஊட்டியில் 2022 மே மாதம் நடக்கவுள்ள மலர்க் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனி கொட்டி வருகிறது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா புல்வெளிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று உறைபனி படர்ந்திருக்கிறது.

இந்த உறைபனி காரணமாக தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகள் கருகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருப்பதற்காக ஊழியர்கள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைத்து வருகின்றனர்.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தொழிலாளர்கள் தண்ணீர் தெளித்து மலர் செடிகள் பனியில் கருகாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி, பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்கு பாப்-அப் முறையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் நர்சரிகளில் நாற்றுக் கள் கருகாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வைகள் மற்றும் கோத்தகிரி மிலார் செடிகளை கொண் டு நாற்றுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
 

 

Tags :

Share via