கீழவெண்மணி படுகொலை சம்பவம் 53 ஆம் ஆண்டு நினைவுநாள்

by Editor / 25-12-2021 11:27:34am
 கீழவெண்மணி படுகொலை சம்பவம் 53 ஆம் ஆண்டு நினைவுநாள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில்  20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் எரித்து படுகொலை செய்யப்பட்ட வெண்மணி தியாகிகள் 53 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவகம் திறக்கப்பட்டது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நாகை எம்பி செல்வராசு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.தமிழகம் முழுவதுமுள்ள ஏராளமானோர் பேரணியாக வந்து வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

 

Tags :

Share via