வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி பணமோசடி செய்த பெண்...

by Admin / 26-12-2021 11:38:59am
வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி  பணமோசடி செய்த பெண்...


தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி அருள் செல்வி. இவர் அருள் கிராம முன்னேற்ற தொண்டு நிறுவனம் எனும் பெயரில் அதே பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். 

சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத் தருவதாகவும்,  இவை தவிர வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்றுத் தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில், போடி அம்மாகுளம் 4வது தெருவை சேர்ந்த செந்தட்டிக்காளை என்பவர் நடத்தி வந்த ஆண்கள் சுயஉதவிக்குழுவினர் அருள்செல்வியை நாடியபோது உங்கள் குழுவில் உள்ள ஒவ்ஒருவருக்கும் தலா ஒருலட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக நபர் ஒருவருக்கு ரூ.
 
6200 வீதம் செலுத்தவேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் பெற்றுக் கொண்டு, இன்று வரை வங்கிக்கடன் பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

சுயஉதவிக்குழுவினர் தங்கள் கட்டிய பணத்தை அருள்செல்வியிடம் கேட்டபோது அவர்களை  ஆபாசமாக பேசி பணத்தை திருப்பிதர மறுத்துள்ளார். 

இதையடுத்து சுய உதவிக் குழுவினர் போடிநகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொண்டதில் ஏற்கனவே கடந்த ஆண்டு பெரியகுளம் பகுதியில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டு  பெரியகுளம் காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது தெரிய வந்ததை அடுத்து, அருள்செல்வி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருள்செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

 

Tags :

Share via