டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை...மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது

by Admin / 29-12-2021 02:11:52pm
டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை...மது அருந்திவிட்டு  வாகனம் ஓட்டினால் கைது

 

புத்தாண்டு க்கொண்டாட்டம் கடும் கட்டுபாடுகள்-டி.ஜி.பி .சைலேந்திர பாபு
தமிழ் நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் வரும் 31ஆம்தேதி புத்தாண்டுக்கொண்டாட தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு..மது அருந்திவிட்டு வாகங்கள் ஓட்டக்கூடாதென்றும் மீறி மது அருந்தி வாகனம் ஒட்டினால் ,ஓட்டுவோர் கைது செய்யப்படுவர்.அவரது வாகம் பறிமுதல் செய்யப்படும். 31ஆம் தேதி நீண்ட தூரம் பயணிப்போர் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது.அன்று இரவு முதல் ஜனவரி 1- அதிகாலை வரை ரயில்,பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மட்டும் பயன் படுத்த வேண்டும்.இரவில் காரில் பயணிப்பவர்கள்3மணி நேரத்திற்கு ஒரு முறை நிறுத்தி பாதுகாப்பாக பயணிக்கவேண்டும்.வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து,அருகாமையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.வெளியூர் செல்பவர்களின் வீடுகள்,ரோந்து காவலர் முலம் கண்காணிக்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள்,உணவகங்கள் இரவு 11மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.என்று காவல்துறைத்தலைவர் சைலேந்திர பாபு அறிவிப்பு விட்டுள்ளார்.

 

Tags :

Share via