ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிசி தேர்வு ஒத்திவைப்பு

by Writer / 07-01-2022 04:37:13pm
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிசி தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஜன.5ம் தேதி திடீரென கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், வார நாட்களில் இரவுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் அரசுத்தேர்வுகள் மற்றும் அரசு சார்ந்த இதர பணிகள் பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் சில அரசுத்துறை சார்ந்த தேர்வுகள் அதாவது UPSC மற்றும் TNPSC தேர்வுகள் வரும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற உள்ளது. அதனால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேர்வுக்கு தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் விண்ணப்பதாரர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற இருந்த துறை சார்ந்த டிஎன்பிசி தேர்வு வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிசி தேர்வு ஒத்திவைப்பு
 

Tags :

Share via