10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்.

by Writer / 07-01-2022 04:04:13pm
10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. இவ்விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகளின்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது

இந்தநிலையில், அதிமுக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே 110 விதியின் கீழ் வெளியிட்டு வந்த அறிவிப்புகளை மீண்டும் பழைய ஜனநாயக முறைப்படியே துறைசார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அந்தந்த அமைச்சரே அறிவித்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதித்ததின் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்பை கூடுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்.
 

Tags :

Share via