விண்வெளியில் இறந்த நட்சத்திரத்தை படம்பிடித்த நாசா விஞ்ஞானிகள்

by Admin / 10-02-2022 04:43:09pm
 விண்வெளியில் இறந்த நட்சத்திரத்தை படம்பிடித்த நாசா விஞ்ஞானிகள்

விண்வெளியில் இருந்த நட்சத்திரத்தின் கடைசி தருணங்களில் நாசா விஞ்ஞானிகள் முதன் முறையாக படம்பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 44 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜி29- 38 என்றுஅழைக்கப்படும் நட்சத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் சந்திரா ஆய்வகம் மூலம் ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது அந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் மற்ற விண்கற்கள் மோதியதை  கண்டுபிடித்தனர்.

மோதிய வேகத்தில் ஜி 29-38 நட்சத்திரத்தில் 18 லட்சம் டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உண்டானதால் அந்த நட்சத்திரம் இறந்து போனதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்

 

Tags :

Share via