800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டு

by Editor / 14-02-2022 11:29:37am
 800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டு

தென்காசி மாவட்டத்தில் மன்னர்காலத்தின் ஆட்சி நடந்ததின் சுவடுகள் இன்னும் ஏராளமான கிராமங்களில் உள்ளன.இதன் தொடர்ச்சியாக சுரண்டை அருகே உள்ள நொஞ்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சின்னவீரசின்னு என்பவர் மகன் வீரமல்லையா இவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிஏ வரலாறு முதல் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பேராசிரியர்கள் வரலாற்று கல்வெட்டுகள் குறித்து கூறியவற்றின் அடிப்படையில் அவரது ஊரில் திருமலையாண்டி நாயக்கர் மகன் அப்பையா நாயக்கர் என்பவர் இடத்தில் உருளை வடிவ கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை வழிபட்டு வருவதாகவும் கல்லூரி பேராசிரியர்களிடம் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தலைவர் ராஜகோபால் மற்றும் செயலாளர் விஜயராகவன் அறிவுறுத்தல் படி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா மற்றும் சமூக ஆர்வலர் அஸ்வத் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Tags : 800 year old cylindrical inscription

Share via