ரஷ்யாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை

by Admin / 15-02-2022 05:39:33pm
ரஷ்யாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஜி 7 நாடுகள் எச்சரித்துள்ளன.

கூட்டாக தடை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் என அமெரிக்கா பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளடக்கிய ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இறையாண்மை எல்லை பாதுகாப்பு பொருளாதாரம் உள்ளிட்டவற்றைக்காக சர்வதேச நிதி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டு உள்ளதாக ஜி-7 நாடுகள் தெரிவித்துள்ளன.

இதற்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் சமூக தீர்வு காணலாம் உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை  ரஷ்யா  தயாராக இருந்தால் சுமூக தீர்வு காண பாதை திறந்து இருப்பதாகவும் அதை விடுத்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை ரஷ்யா ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் வெள்ளை மாளிகையின் இணையப் பத்திரிகை செயலாளர்கரைன் ஜீன் பொரி  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via