குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறிய நாணயங்கள் இன்று வெளியீடு

by Staff / 06-06-2022 02:01:58pm
குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறிய நாணயங்கள் இன்று வெளியீடு

பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையிலான சிறப்பு நாணயங்கள் தொகுப்பு பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கொண்டாட்டங்களை தொடக்கி வைக்கும் பிரதமர் மோடி கடந்த எட்டு ஆண்டுகளில் இரு அமைச்சர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து டிஜிட்டல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். 1 2 5 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயங்கள் பிரதமர் வெளியிடுகிறார். பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் நாணயத்தில் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via