தமிழகத்தில் விறுவிறுப்பான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

by Editor / 19-02-2022 12:47:12pm
 தமிழகத்தில் விறுவிறுப்பான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது..தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றுவருகிறது.

 காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவுஇன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு தமிழகம் தயார்.. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை..தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டி8 முனைப்போட்டிநகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 8 முனைப் போட்டி நிலவுகிறது... திமுக இந்த முறையும் கூட்டணியுடன் களமிறங்கி உள்ளது.. அதிமுக வழக்கத்துக்கு மாறாக தனித்து போட்டியிடுகிறது.. பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக, போன்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கை பேணி காக்க 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தயார் நலைஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. 268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.சிசிடிவி கேமராக்கள்வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் உரிய டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கொரோனா  பரவலை தடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதுமுள்ள வாக்கு சாவடிகளில் சில இடங்களில் மட்டும் சில சில பிரச்சனைகள் ஏற்பட்டன. உடனடியாக காவல்துறையினர் விரைந்துவந்து பிரச்சனைகளை சரி செய்தனர்.ஏழ்மைன் இடங்களில் இயந்திரங்கள் பழுதாகிபின்னர் சரிசெய்யபட்டன.பல பகுதிகளில் முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் இல்லாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளன.வாக்குசாவடிகளுக்குள் சென்று பாலா இடங்களில் வேட்பாளர்கள் வாக்கு கேட்கும் சம்பவங்களும்நடந்தன.தமிழகம் முழுவதும் சுமார் 25 சதவிகித வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

 தமிழகத்தில் விறுவிறுப்பான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
 

Tags : local body elaction

Share via