ஒரே நாளில் லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்வு.

by Editor / 13-03-2022 07:43:37pm
ஒரே நாளில் லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்வு.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்த  'தேசிய லோக் அதாலத்' தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று நடைபெற்றது.

அவ்வாறு தமிழகத்தில் நேற்று நடந்த 'தேசிய லோக் அதாலத்' நிகழ்வுக்காக, சென்னை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகள் நடைபெற்றன. 

இந்த 'தேசிய லோக் அதாலத்' மூலம் மொத்தமாக ரூ.334,91,11,545 மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 63,348 மற்றும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராத 12,251 வழக்குகளும் அடங்கும்.

இந்த நிகழ்வில் 2,004 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ. 49,97,23,381 பணம்  செட்டில் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 3,157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு ரூ.144,85,25,246 இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் 7,301 சிவில் வழக்குகளில் ரூ. 33,60,32,130 இழப்பீடு வழங்கப்பட்டது.

 

Tags : In a single day, 79,599 cases worth Rs 334 crore were settled in the Lok Adalat.

Share via