தமிழகம முழுவதுமுள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு.

by Admin / 02-04-2022 08:49:11am
தமிழகம முழுவதுமுள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு.

 

தமிழகத்தியிலுள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சியிலுள்ள வீடுகள்,கடைகள்,வணிக வளாகங்கள்,

பள்ளி,கல்லூரிகளுக்கு சொத்துவரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

சென்னையில், 600-1200 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு 75% வரி, 1,201-1,800 சதுர அடிட வீடுகள் 100% உயரும். 1,801 சதுர அடி 150% அதிகரிக்கும்.
சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளுக்கு, 600 முதல் 1200 சதுர அடி  வீடுகள் 50% , 1,201 முதல் 1,800 சதுர அடி வரையிலான வீடுகள் 75%, 1,801 சதுர அடி வீடுகள் 100% உயரும்.

சென்னை வணிகக் கட்டிடங்கள் , தொழிற்சாலைகளுக்கு 150% வரி, கல்வி நிறுவனங்கள் 100% உயரும். பிற மாநகராட்சிகளில் 100% மற்றும் 75%  அதிகரிப்புஆக இருக்கும்.
மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மாநிலத்திற்கு மானியம் பெற வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. .பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான வீடுகளைக் கொண்டுள்ளனர்,  இந்த உயர்வு அவர்களை அதிகம் பாதிக்காது என்று  தெரிவித்துள்ளது

 

Tags :

Share via