கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணி வாய்ப்பு அமைச்சர் சுப்பிரமணியன்

by Editor / 04-04-2022 11:52:19pm
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய  செவிலியர்களுக்கு பணி வாய்ப்பு  அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 2020 ஆம் ஆண்டு 3,200 செவிலியர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் 2,400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியராக பணியமர்த்தப்படுவதாகவும், மீதமுள்ளவர்கள் எதிர்காலத்தில் காலியிடங்களுக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பேச்சுவார்த்தையின்போது மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக 800 செவிலியர் மார்ச் 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, சென்னை - டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற செவிலியர்கள்  கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 800 செவிலியர்களும்  படிப்படியாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

 

Tags : கொரோனா பெருந்தொற்று

Share via