சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

by Editor / 18-04-2022 07:57:29pm
சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழக சட்டமன்றத்தில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பதிலுரை:

ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன்.வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது,செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும்.சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்;
முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும்.
அம்மா திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்திலேயே நிறுத்தி விட்டார்கள்.274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்;10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்.50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுகோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.

 

Tags : We expect caste certificate to be issued within 7 days - Minister KKSSR Ramachandran

Share via