பட்டினபிரவேசத்திற்கு அனுமதி

by Admin / 08-05-2022 02:18:57pm
 பட்டினபிரவேசத்திற்கு அனுமதி

தருமபுர ஆதீனத்து சார்பாக பட்டின பிரவேச நிகழ்வு ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வரும்ஆன்மீக மரபு.இந்தாண்டும் இந்த நிகழ்விற்காக ஆதீனத்து சார்பாக அனுமதி கோரியபொழுது மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.ஆதீனம் அமர்ந்திருக்கும் பல்லக்கை மனிதர் தூக்கிச்செல்வது மேலும் அடிமைத்தனத்தைவளர்க்கும் என்ற கருத்து திராவிடர்கழகம் உள்ளிட்ட பகுத்தறிவு இயக்க சார்பினர் எதிர்ப்பை முன் வைத்தனர்.பா.ஜ.க,அ.தி.மு.க கட்சிகள் பட்டினபிரவேசத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தின.பா.ஜ.க தலைவர் பல்லக்கை தானே தோளில்சுமப்பேன் என்று அறிக்கைவிட்டார்.இப்படி பட்டினபிரவேச நிகழ்வு குறித்த விவாதங்கள் நீண்டு கொண்டிருக்கையில்,இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆதினங்களோடு பேசி முதல்வரோடு பேசி ஒரு நல்லமுடிவு  அறிவிக்கப்படும்என்றுதெரிவித்திருந்தார்

.இந்நிலையில்,தமிழக அரசு ஒராண்டு ஆட்சி நேற்று நிறைலடைந்ததை பாராட்டும் முகமாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,மயிலாடுதுறை,தருமபுரஆதீனம்,தம்பிரான் சுவாமிகள்,மயிலம் பொம்மபுரம் ஆதீனம்,சிவஞானபால்ய சுவாமி,கோவை பேரூர் ஆதீனம்சாந்தலிங்க மருதாசலஅடிகளார் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர்.இதனைத்தொடர்ந்து ஆதீனம் சார்பாக பட்டினபிரவேசம் நடத்த முதலமைச்சர் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளதாக தகவல்

 

Tags :

Share via