குவாட் உச்சி மாநாட்டில் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

by Staff / 23-05-2022 02:11:30pm
குவாட் உச்சி மாநாட்டில் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

குவாட் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்தியர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை டோக்கியோசட் அடைந்த அவருக்கு ஹோட்டலில் திரண்டு இருந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி ஜப்பான் வாழ் இந்திய சமூகத்தினர் பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை அளித்து முன்னோடியாக திகழ்வதாகவும் இந்தியாவுடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு வரவேற்பால் அனைத்து இந்திய வம்சாவளி கொண்டிருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஆஸ்திரேலியா ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்துகிரது.இந்த திட்டம்  இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று வெளியுறவு செயலாளர் வினய் குவித்ரா குறிப்பிட்டுள்ளார் 40 மணி நேர பயணத்தில் 23 நிகழ்வு நிகழ்வுகளை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

 

Tags :

Share via