செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ தகவல்

by Editor / 24-07-2021 08:26:41pm
 செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ தகவல்


கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் ஐபிஎல் 2021 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த பெரிய லீக்கின் உயிர் குமிழில், வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் தாக்கப்பட்டனர், அதன் பிறகு இந்த பெரிய முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில், ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.மே 4 அன்று கொரோனா காரணமாகஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 போட்டிகள் இப்போது செப்டம்பரில் மீண்டும் நடத்தப்படும்.


இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் எங்கு நடைபெறும், எந்த தேதிகளில் போட்டிகள் நடக்கும் என்பது குறித்து பிசிசிஐநிர்வாகி தகவல் தந்துள்ளார். அனைத்து அணி உரிமையாளர்களிடம் பேசிவிட்டோம். போட்டிகள் செப்டம்பர் 18, 19, 20 ஆம் போன்ற எதாவது ஒரு தேதியில் துவங்கும். செப்டம்பர் 18 சனிக்கிழமை. வார இறுதியில் போட்டிகளைத் துவங்குவது சிறந்த முடிவாக இருக்கும். இறுதிப் போட்டி அக்டோபர் 9 அல்லது 10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.


மேலும் இந்தியா, இங்கிலாந்து போட்டிகள் செப்டம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த பிறகு அடுத்த நாளே இரு நாட்டு ஐபிஎல் வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். அதேபோல் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று முடித்துவிட்டு மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும் அங்குச் சென்றுவிடுவார்கள். மற்ற நாட்டு வீரர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து பின்னர்தான் தெரியவரும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுவதால், எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. எஞ்சிய 31 போட்டிகளை நடத்த பிசிசிஐ கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via