உத்தரபிரதேசத்தில்1400க்கும் மேற்பட்ட திட்ட பணிகள் தொடக்கம்

by Staff / 03-06-2022 01:15:18pm
உத்தரபிரதேசத்தில்1400க்கும் மேற்பட்ட திட்ட பணிகள் தொடக்கம்

உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆன1.406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். யோகி ஆதித்யநாத் ஆட்சி பொறுப்பேற்ற பின் ஏற்கனவே இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ள நிலையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கௌதம் அதானி குமார் மங்கலம் பிர்லா சாஜ்ஜன் ஜிண்டல் ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். லக்னோவில் கோமதி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1406 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விவசாயம் சார்ந்த தொழில்கள் கால்நடை வளர்ப்பு மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளன. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் துவக்கப்படும் தொழில்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இன்று முதல் நடைமுறைப்படுத்த மேற்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கான்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குடியரசுத் தலைவர் வாசித்தபோது பொது பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி இன்று பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via