சனி பகவான் திருக்கோவில்

by Writer / 06-06-2022 05:40:09pm
சனி பகவான் திருக்கோவில்


இந்து மதத்தில் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் உலகை ,உலக மக்களை எப்படி பீடிக்கிறது என்பதை புராணங்கள் எடுத்தியம்புகின்றன. விஸ்வகர்மாவின் புதல்வியான சந்தியா.சூரியனின் மனைவி .சிவனை வழிபட தவம் மேற்கொள்ள விரும்பி..தந்தையின் அனுமதியுடன் கணவருக்கு தெரியாமல்,அவருடன் வாழ்வது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முனைகிறாள்.தன் நிழலை எடுத்து தன்னை போன்ற பெண்ணை உருவாக்கிறாள். அவள் சாயா. சந்தியா தவமேற்கொண்ட பின்பு  ..சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. கர்மாவின் அடிப்படையிலே அனைத்தும் நடக்கும் என்பதை உணர்த்துபவர்.அவர் பார்வைக்கு அனைவரும் சமமானவர்களே.சனிக்கென்று தனியான கிரகம் கிடையாது. ஆனால், சனி கிரகங்களில் வலிமையானவர். ஏழரைச்சனியில் எப்பேர்பட்டவனும் அவனுக்குரிய கர்ம பலன்களை அடைந்தே தீர வேண்டும் என்பது நியதி.  சனியை போல கொடுப்பாரும் ஒருவருமிலர் என்று சொல்லும் அளவுக்கு சனியின் செயல்பாடு அமைகிறது.சனிக்கு என்றுதமிழ்நாட்டிற்கு அருகே உள்ள காரைக்கால் பக்கத்தில் திருநள்ளாறில் உள்ளது. இக்கோவில்,தென்னகத்தில்சனிகென்று அமைந்த பெரிய கோவிலாகும் .இது போன்றே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனாவிற்கும் சீரடிக்கும் இடைப்பட்ட பகுதியான அகமத் மாவட்டத்திலூள்ள நைவாசா தாலுகவில் உள்ள சனி ஷிங்னாபூரில் உள்ளது.இக்கோவில் வட இந்தியர்களின் புனித தலமாக உள்ளது.

சனி பகவான் திருக்கோவில்
 

Tags :

Share via