ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது உண்மையா தகவல்களை சேகரிக்கும் நாசா

by Staff / 13-06-2022 04:42:49pm
ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது  உண்மையா  தகவல்களை சேகரிக்கும் நாசா


வானில் தென்பட்ட  அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு போன்ற பொருள் குறித்து கண்டறியவும் அது குறித்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது .அதிக ஆபத்துள்ள அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல வான்வெளி நடவடிக்கை  குறித்த ஆராய்ச்சி நாசா தீவிரப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது .இதன் ஒரு பகுதியாக பறக்கும்தட்டு உள்ளிட்ட பொருள்களை நடமாட்டம் குறித்த ஆய்வுகளில் நாசா ஈடுபட்டுள்ளது கடந்த ஆண்டு மட்டும் ஏலியன்கள் போன்ற அடையாளம் தெரிந்த ஆனால் அனுமானிக்க முடியாத மர்ம நடமாட்டங்கள் என 144 சம்பவங்களை அமெரிக்க உளவுத்துறை பட்டியலிட்டு ஆய்வுசெயுமாறு நாசா  இடம் கொடுத்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்த நாசா உளவுத்துறை பற்றி அளித்த சம்பவங்களை விரைவாக விளக்க இயாலவிட்டாலும் அதை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளது. ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பயணம் செய்வதாக கருதப்படும் விண்வெளிவாகனங்களில் யு எப் ஓ  அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் என்றும் வழக்கு மொழியில் பறக்கும் தட்டு என்றும் குறிப்பிடப்படுவது நினைவுகூரத்தக்கது.

 

Tags :

Share via