நாளைமறுநாள் 10,12 வகுப்பு தேர்வு முடிவுகள்

by Editor / 18-06-2022 09:06:39am
நாளைமறுநாள் 10,12 வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளைமறுநாள்  20 -ம் தேதி காலை 9.30 மணிக்கும், 10 -ம் வகுப்பு தேர்வு முடிவு நண்பகல் 12 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வெளியிட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 

Tags : Class 10,12 exam results tomorrow

Share via