தமிழக அரசு ஊழியர் விருப்ப ஒய்வில் மாற்றம்

by Admin / 28-06-2022 10:40:25pm
தமிழக அரசு ஊழியர் விருப்ப ஒய்வில் மாற்றம்

தமிழக அரசில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற அதற்கான புதிய வெயிடேஜ் முறையை தமிழக அரசு  மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.54 வயதில் விருப்ப ஒய்வு பெற்றவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வெயிடேஜ் கொடுக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பணிபுரிந்ததாக கருதி அதனடிப்படையில் மாத ஒய்வூதியம் கணக்கிடப்பட்டு வந்தது .இப்புதிய வெயிட்டேஜ்  முறைப்படி ஐம்பத்து ஐந்து வயதிற்கு கீழ் பணியாற்றி  விருப்ப ஒய்வு பெற்றால் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான வெயிட்டேஜ்  கொடுக்கப்படவுள்ளது.ஐம்பத்து ஆறு வயதில் விருப்ப ஒய்வு பெற்றால் நான்கு ஆண்டுக்கான வெயிட்டேஜ் கொடுக்கப் பட்டு அறுபது ஆண்டுகள் பணியாற்றியதாக  கணக்கிடப்படடு ஒய்வூதியம் வழங்கப்படும்.ஐம்பத்து ஏழு வயதில் விருப்ப ஒய்வு பெற்றால் மூன்றாண்டுகளுக்கான வெயிட்டேஜ் தரப்பட்டு அறுபது ஆண்டுகள் பணிசெய்ததற்கான ஒய்வூதியம் வழங்கப்படும்.ஐம்பத்து ஒன்பதில் விருப்ப ஒய்வு பெற விரும்பினால் ஒரு ஆண்டுக்கான வெயிட்டேஜ் வழங்கப்பட்டு அறுபது ஆண்டு பணியாற்றியதாக கருத்தில் கொண்டு ஒய்யூதியம் வழங்கப்படும்.அதே சமயம் விருப்ப ஒய்வு பெறும் மாதத்திலிருந்து மாத ஊதியம் நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via