திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 21-07-2022 10:14:30pm
திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்பு மிகுந்த அரசியலமைப்பின் பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags : Chief Minister M. K. Stalin congratulates Dravupati Murmu

Share via