குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

by Editor / 24-07-2022 08:07:36am
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நாளையடன் முடிவடைகிறது. நாளை மறுநாள் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்க இருக்கிறார்.

ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெற உள்ளதை ஒட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று விருந்து அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, குடியரசுத் தலைவராக தேர்வாகி உள்ள திரெளபதி முர்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அளித்த பிரிவு உபசார விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.


நாளை அவரது பதவிக் காலத்தின் கடைசி நாள். இதை முன்னிட்டு, நாளை இரவு நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் அவரது உரை இருக்கும் என்றும் இந்த உரை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது குடியரசு தலைவராக நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில், திரெளபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 

 

Tags : President Ram Nath Kovind will address the nation tomorrow at 7 pm

Share via