காவிரியில் 2.3 லட்சம் கன அடி நீர் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின

by Editor / 04-08-2022 02:39:01pm
காவிரியில் 2.3 லட்சம் கன அடி நீர் கரையோரப்  பகுதிகள் நீரில் மூழ்கின

கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் கபினி அணைகள் நிரம்பியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்கு 15000 ஆயிரம் கன அடி நீரும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளிலும் இருந்து மொத்தம் 83 ஆயிரத்து 100 கன அடி நீர் காவிரியில் பாய்கிறது இத்துடன் கர்நாடக அணைகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்துக்கு நிலவரப்படி நொடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து பதிவுகளிலும் தடுப்பு வேலிகளை மூழ்கடித்து 6 முழுவதும் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து உயரும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அணையில் இருந்து நொடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் இந்திரா நகரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதுகாப்பு கருதி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via