பயங்கர நிலநடுக்கம் பதற வைக்கும் வீடியோ

by Staff / 19-09-2022 01:51:28pm
பயங்கர நிலநடுக்கம் பதற வைக்கும் வீடியோ

தைவானின் டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து பல முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. தொடர்ந்து நேற்று மதியம் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த தைவானும் அதிர்ந்தது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. ரயில்கள் தடம் புரண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி திறந்தவெளி மைதானங்களில் தஞ்சம் புகுந்தனர்.
 

 

Tags :

Share via