கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி காருடன் பறிமுதல் - டிரைவர் கைது.

by Staff / 24-09-2022 02:45:14pm
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி காருடன் பறிமுதல் - டிரைவர் கைது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு குமரி மாவட்டம் வழியாக ரேஷன் மற்றும் மானிய மண் எண்ணெய் கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பளுகல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் எல்லைப்பகுதியான கண்ணுமாமூடு சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்திய போது ஓட்டுநர் காரை விட்டு விட்டு தப்பியோட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மணலிக்கரை பகுதியை சார்ந்த ஜெய்சன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரையும் ஓட்டுநரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார், டிரைவ ரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேஷன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவல கத்திலும் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via