டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலகளவில் இந்தியா முதலிடம்

by Staff / 11-10-2022 03:02:50pm
டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலகளவில் இந்தியா முதலிடம்

ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் தகவல் காங்கிரஸ்-2022 கூட்டத்துக்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது:- நிகழ்நேர டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும் சிறிய அளவிலான விற்பனையாளர்கள் கூட டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியா சிறந்த புதுமையான உணர்வைக் கொண்ட ஒரு இளம் தேசம். நாம் உலகின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். 2021 முதல், யூனிகார்ன் ஸ்டார்ட்- அப்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தியுள்ளோம். இதற்கு இந்தியாவின் இளம் திறமைதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via