சென்னையில்  தங்கத்தின் விலை சரிவு 

by Editor / 17-06-2021 04:33:48pm
சென்னையில்  தங்கத்தின் விலை சரிவு 

 


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 496 குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது என்பதும் ஒரு நாள் ஏறிய தங்கம் மறுநாள் இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 496 தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூபாய் 496 குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் ரூ.4515 க்கும் சவரன் ஒன்றின் விலை 36,120 க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளியின் விலை சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.75.10 எனவும் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4577க்கும் ஒரு சவரன் விலை ரூ.36,616 என்றும் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.76.40 என விற்பனையானது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via