நாளை முதல் 10,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

by Staff / 20-10-2022 04:24:30pm
நாளை முதல் 10,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை(21-ந்தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை 3நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,518 பஸ்கள் இயக்கப்படும் என்று கடந்த 10-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்து இருந்தார்.

அதன்படி பஸ்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1437 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை மறுநாள்(22-ந் தேதி) வழக்கமான பஸ்களுடன் 1586 சிறப்பு பஸ்களும் 23-ந் தேதி வழக்கமான பஸ்களுடன் 1,195 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது.

 

Tags :

Share via