மது அருந்த, புகை பிடிக்க தடை

by Staff / 28-10-2022 12:30:57pm
 மது அருந்த, புகை பிடிக்க தடை

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அனைத்து கிளை, மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது, பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும்போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது.

பணிமனைக்குள் ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறையில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிமனைக்குள் எந்த ஒரு பணியாளரும் வரக்கூடாது. பாதுகாவலர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய பணியாளர்களை அனுமதிக்க கூடாது. மீறிச்செல்லும் பணியாளர்கள் மீது உடனடியாக பணியில் இருக்கும் மேற்பார்வையாளர், பாதுகாவலர் மற்றும் பணியில் உள்ள சக தொழிலாளர்களின் அடிப்படை புகார் பெற்று கிளை மேலாளரின் பரிந்துரையுடன் தலைமையகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via