800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை

by Staff / 15-11-2022 05:03:44pm
800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசில் 21.5 கோடி, இந்தோனேஷியா 27.5 கோடி, நைஜீரியாவில் 21.6 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கின்றனர். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via