வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தில்லியில் டிராக்டர் பேரணி

by Editor / 25-06-2021 04:49:33pm
வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தில்லியில் டிராக்டர் பேரணி



மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 7 மாத காலத்தைக் கடந்துள்ள நிலையில் தில்லியில்  டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 200 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திஜூன் 26) தில்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒத்திகைகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக உத்தரப்பிரதேச விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் தில்லி காசியாபாத்தில் குவிந்து வருகின்றனர்.மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தொழிற்சங்கங்கள் தலைமையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
 

 

Tags :

Share via