5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை கனிமொழி எம்பி வழங்கினார்.

by Staff / 10-12-2022 03:00:36pm
5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி துப்பாக்கி-சூட்டில் உயிரிழந்த 13-பேர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு சார்பில் 20-லட்சம் வழங்கப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கினர்.இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் தெரிவித்திருந்தது.அதனடிப்படையில் தமிழக முதல்வர் தூத்துக்குடி துப்பாக்கி-சூட்டில் உயிரிழந்த 13-பேர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5-லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி-சூட்டில் உயிரிழந்த 13-பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5-லட்சம் ரூபாயை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தயார் வனிதா கனிமொழி எம்பி கொடுத்த காசோலை வாங்க மறுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் படி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இது தொடர்ந்து அவர்களிடம் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்பி தெரிவித்ததை தொடர்ந்து காசோலையை பெற்றுக் கொண்டார்.அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via