13 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ஏர் இந்திய விமானம்
பெங்களூருவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்ல இருந்த ஏர் இந்திய விமானம் புறப்படும் நேரத்தில் இருந்து 13 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. நேற்று மதியம் 2 மணி 20 நிமிடங்களுக்கு கிளம்ப வேண்டிய விமானம், இன்று அதிகாலை 3 மணி 26 நிமிடத்திற்குதான் புறப்பட்டது. இதனால் அதற்காக காத்திருந்த 206 பயணிகளும் சமூக வலைதளங்கள் மூலம் ஏர் இந்தியாவை விமர்சித்து வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த காலதாமத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
Tags :