தமிழகத்திற்கு இந்தாண்டு 50 சுகாதார நிலையங்கள் கிடைத்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.

by Editor / 21-01-2023 09:06:49pm
தமிழகத்திற்கு இந்தாண்டு 50 சுகாதார நிலையங்கள் கிடைத்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு பேசியதாவது:மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்கள் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளதாகவும் பல்வேறு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபயணம் உள்ளிட்டவற்றை நடத்தி தீர்வு கண்டு வெற்றி கண்ட பெருமை அவரையே சாரும் எனவும் தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டைப் போன்று இரண்டு மடங்கு அதிக அளவு மக்கள் தொகையை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது எனவும் இந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு 50 சுகாதார நிலையங்கள் கிடைத்ததாகவும் அதில் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையமும்,
25 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைய உள்ளதாகவும், அதில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கீழக்கலங்கல் என்னும் இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்திற்க்கு 55.70 கோடி திட்ட மதிப்பீட்டில் 21 அறிவிப்புகளின் மூலம்  மாவட்டத்தில் ஐந்து மருத்துவமனைகள் அமைய உள்ளதாகவும் தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய நகராட்சிகளில் தலா ஒரு மருத்துவமனையும், கடையநல்லூர் நகராட்சியில் இரண்டு மருத்துவமனை என மொத்தம் ஐந்து மருத்துவமனைகள் அமைய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் மேலும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையானது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஒதுக்கும் பட்சத்தில் முதலாவதாக தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இறுதியாக கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
 

 

Tags :

Share via