அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

by Editor / 04-02-2023 10:24:06pm
அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 6, 8, 11, 13, 15, 20, 22, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் (22621), பிப்ரவரி 5, 7, 10, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் (22622), பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27 வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105), பிப்ரவரி 24 அன்று புறப்பட வேண்டிய ஓஹா - தூத்துக்குடி ரயில் (19568) பிப்ரவரி 26 அன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி - ஓஹா ரயில் (19567), பிப்ரவரி 6 முதல் மார்ச் 1 வரை  மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), பிப்ரவரி 5 முதல்  மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127), பிப்ரவரி 5, 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), பிப்ரவரி 9 16 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி ரயில் (16788), பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4,  5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா ரயில் (12666), பிப்ரவரி 6, 7, 8, 10, 13, 14, 15, 17, 20, 21, 22, 24, 27, 28 மார்ச் 1, 3, 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16340), பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை - நாகர்கோவில் ரயில் (16339(, பிப்ரவரி 11, 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் (16354),  பிப்ரவரி 5, 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா - நாகர்கோவில் ரயில் (16353), பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (16232),  பிப்யவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), பிப்ரவரி 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை ரயில் 16102),  மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824), மார்ச் 1 அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - மும்பை தாதர் ரயில் (22630) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

 

Tags :

Share via