திப்ரூகர் - கன்னியாகுமரி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

by Editor / 23-02-2023 09:03:25am
திப்ரூகர் - கன்னியாகுமரி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு ரெயில்வேயில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திப்ரூகர் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் 25 - ந்தேதி மற்றும் 28 - ந்தேதி ஆகிய தேதிகளில் திப்ரூகரில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரியில் இருந்து
திப்ரூகருக்கு அடுத்த மாதம் ( மார்ச் ) 2 - ந்தேதி மற்றும் 5 - ந்தேதி புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு  தெற்கு ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டு உள்ளது.
 

 

Tags :

Share via