யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

by Editor / 25-02-2023 10:14:25am
யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை அருகே ஊருக்குள் புகுந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் விடப்பட்டது.  கோவை பேரூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானையை வனதுறையினர் பிடித்து தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் சுற்றிதிரிந்த  ஒற்றை யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேத படுத்தி வந்தது, பின்னர் வனதுறையினர் கும்கி யானை துணையுடன் பிடித்து ஆனைமலை அருகே உள்ள டாப் ஸ்லிப் பகுதியில் விட பட்டது. அந்த மக்னா யானை அங்கிருந்து சேத்துமடை வழியாக பாலகாடு சாலைக்கு வந்தது பின்னர் கோவை பேரூர் செல்வபுரம் சென்று அங்குள்ள தோட்டத்தில் புகுந்து பயிர்களை ஆழித்தும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் முன்னாள் கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் அந்த குழுவில் சுகுமாரன் மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின் வனத்துறையினர் யானையை மேட்டுப்பாளையத்தில் வன பகுதியில் விட சென்றனர் அப்போது அங்குள்ள பொது மக்கள் யானையை அங்கு விட எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  அந்த யானையை வால்பாறை அருகே உள்ள மாணம்பள்ளி வன பகுதியில் விட பட்டுள்ளது.

 

Tags :

Share via