கஞ்சா வழக்கில் கைதான இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ஒரு லட்ச ரூபாய் அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு.

by Editor / 25-02-2023 10:16:07am
 கஞ்சா வழக்கில் கைதான இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ஒரு லட்ச ரூபாய் அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு.

மதுரை மாநகர் பகுதியில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 2013ம் ஆண்டு மதுரை கரிமேடு காவல்துறையினர் கரிமேடு மற்றும் ஜெயில் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த  வழியாக வந்த ஷேர் ஆட்டோவை சோதனை செய்த போது  அதில் 25கிலோ கஞ்சா விற்பனை  செய்ய கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த சிவனம்மாள், ஆண்டிச்சாமி, பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிவனம்மாள் 
பாண்டி, ஆண்டிச்சாமி (இறந்துவிட்டார்)ஆகியோருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் 1 லட்சம் அபராத தொகை விதித்து  நீதிமன்றம்  உத்தரவிட்டது.

 

Tags :

Share via