கச்சதீவு புனித அந்தோணியாருக்கு திருவிழா

by Staff / 03-03-2023 02:27:48pm
கச்சதீவு புனித அந்தோணியாருக்கு திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து  2400 பக்தர்கள் 72 படகுகளில் புறப்பட்டு சென்றனர்.பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய - இலங்கை இருநாட்டு மீனவர்கள் கடலில் தங்களைக் காக்கும் காவல் தெய்வமாக கச்சத்தீவு புனித அந்தோணியாரை போற்றி வணங்கி  வருகின்றனர்.கடலில் தங்களை பாதுகாக்கும் பாதுகாவலரான புனித அந்தோணியாருக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில்  ஆண்டுதோறும்கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பாடுகளை எண்ணி விரதம் இருக்கும்  தவக்காலத்தில் பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் கச்சதீவு புனித அந்தோணியாருக்கு திருவிழா எடுத்து மகிழ்கின்றனர்.அந்த வகையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று ராமேஸ்வரத்தில் இருந்து 2400 பக்தர்கள் 60 விசைப்படகுகளிலும், 12 நாட்டு படகுகளிலும் இன்று காலை புறப்பட்டனர்.காவல்துறை, வருவாய்த்துறை, சுங்கத்துறை, குடியுரிமைத்துறை மற்றும் மீன்வளத்துறை, இந்திய கடற்படை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் திருப்பயணிகள் படகில்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ்  கொடியசைத்து பக்தர்கள் படகுகளை வழியனுப்பி வைத்தார்.

 

Tags :

Share via