ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம்

by Staff / 29-03-2023 02:56:54pm
ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம்

ஒரே பயணசீட்டு முறைக்கென தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்தபின் பயணிக்கஉள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய கூடிய ஒரே இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையே 2 மாதத்திற்கு முன் நடந்த இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள அனைத்து பொது போக்குவரத்தையும் ஒருங்கிணைப்பது குறித்த திட்டங்கள் வரையறுக்கப்பட்டது.இதனை அமல் படுத்த தனி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலில் புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளின் முழு விவரத்தையும் பதிவு செய்யவேண்டும், மொத்த தொகையை செலுத்திய பின்னர் அந்த நாள் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பயண முறைகளில் பயணம் செய்யலாம்  என தெரிவிக்க-பட்டுள்ளது.இந்தியாவிலேயே முதன் முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என 3 விதமான போக்குவரத்தில் பயணிக்கும் வசதி அறிமுகபடுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டரை தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான பணிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via