தூத்துக்குடியில் களைகட்டிய கலை திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

by Editor / 30-04-2023 11:45:36pm
தூத்துக்குடியில் களைகட்டிய கலை திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்,திமுக துணைப் பொதுச்செயலாளருமான  கனிமொழி கருணாநிதி யின் முன்னெடுப்பில், தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் ஏப்ரல் 28 தொடங்கி மே 1ஆம் தேதி வரை 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.இந்த நெய்தல் கலை விழாவில், 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.நெய்தல் கலை விழாவின் 3ஆம் நாளான இன்று தூத்துக்குடி இசைக் கல்லூரி,குமரராமன் தேவராட்டம் குழு,உவரி களியல் குழு,ஸ்ரீ கிருஷ்ணலீலா பிருந்தவன கும்மி கோலாட்டம் மகளிர் இசைக் குழுவினர்,கலை அருவி கலைக்கூடம், திருச்சி மயில் காவடி,காம்ரேட் கேங்ஸ்டா,ஸ்டார் கலைக்குழு ஜிக்காட்டம்,ஆன் தி ஸ்ட்ரிட்ஸ் ஆஃப் சென்னை.யின் இசை நிகழ்ச்சி  உள்ளிட்டவைகள் நடைபெற்றன.இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். களைகட்டிய கலை திருவிழாவில்பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்

மங்கல இசையில் தொடங்கி கிராமத்து இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற பாடல், காண பாடல்கள் என களைகட்டிய விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகளுடன் கூடிய உணவுத்திருவிழாவும் நடந்தது.இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

தூத்துக்குடியில் களைகட்டிய கலை திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
 

Tags :

Share via