தமிழக கேரளா எல்லை புளியரையில் போலீசாரின் பற்றாக்குறையால் தொடரும் வாகன போக்குவரத்துபாதிப்பு.

by Editor / 05-05-2023 08:59:52am
தமிழக கேரளா எல்லை புளியரையில் போலீசாரின் பற்றாக்குறையால் தொடரும் வாகன போக்குவரத்துபாதிப்பு.

தமிழக கேரளா எல்லை புளியரை சோதனைச்சாவடியில் போலீசாரின் பற்றாக்குறையால் தொடரும் வாகன போக்குவரத்துபாதிப்பு -நிரந்தரமாக கூடுதல் போலீசாரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.


தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு ஏராளமான அத்தியாவசிய பொருட்கள் 24 மணி நேரம் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு  வருகின்றன இந்த நிலையில் தற்போது கடந்த சில ஆண்டுகளாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களும் கேரள மாநிலத்திற்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வருகின்ற வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்களால் தொடர்ந்து அடிக்கடி புளியரை மற்றும் கோட்டைவாசல் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 4 மணிமுதல் கனிமவளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதே போன்று கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்களும் தமிழகம் நோக்கிவந்தவண்ணமுள்ளதாலும் இன்று அதிகாலை 4 மணி முதல் புளியரையில் பெரும் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து தற்பொழுது சீரமைக்கும் பணியில் ஒருசில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டத்தில்  உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பபட்டு விடுவதால் போதிய அளவில் போலீசார் இல்லாததின் காரணமாகவும் இரண்டு மாநில எல்லைப் பகுதிகளில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து தமிழக மறு பாகங்களும் இரண்டு புறங்களில் அணிவித்து நிற்கின்றன புலிகளில் இருந்து ஆரியங்காவு வரையிலும் கேசவபுரம் பகுதியில் இருந்து புளியரை வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக கேரள அரசு மருத்துவமனைகளுக்கு,விமானநிலையங்களுக்கு  செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இருமானில எல்லைப்பகுதி என்பதால் கேரளவிலுள்ளது போல  கனிமவளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கவேண்டும் என்றும்,சோதனைசாவடிகளில் கூடுதல் போலீசார்இல்லாததால் வாகனங்களை,ஆவணங்களையும் சோதனைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் தடைசெய்யபட்டுள்ள பொருட்களை தமிழகத்திற்குள்ளும்,தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் கொண்டு செல்லும் கும்பல்கள் ஊடுருவ வாய்ப்பு அதிகமுள்ளதால் இதனை கருத்தில்  கொண்டு சோதனைசாவடியில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுப்படவேண்டும்,போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி சில புரோக்கர்கள் போலி எடை சீட்டுக்கள் மூலம் அளவுக்கு அதிகமான கனிவளங்களை ஏற்றிவரும்  வாகனங்களை கேரளாவுக்கு கடத்தி விடும் செயல்களும் நடந்துவருகின்றன.

 

Tags :

Share via