திமுகதான் இனி 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் .

by Editor / 10-05-2023 12:15:07am
திமுகதான் இனி 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் .

உதயநிதிக்கு மந்திரி பதவி கொடுத்து ட்ரெயினிங் கொடுத்து வருவதாகவும் திமுகதான் இனி 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் பிஜேபிக்கு எந்த வேலையும் கிடையாது என தமிழக வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையில் பேச்சு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாகை மரத்திடலில் தமிழக அரசு ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் வெங்கடேன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் தெரிவிக்கும் போது தமிழக முதல்வர் 24 மணி நேரம் உழைத்து வருகின்றார் எனவும் மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் உடன் செய்யக்கூடியவர் எனவும் தெரிவித்தார். மேலும் திமுகதான் இனி 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் எனவும் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் குடும்ப கட்சி வாரிசு கட்சி என கூறுவது தவறு கட்சிக்காக உழைந்தவர் நமது தலைவர் அதன்பிறகு கலைஞர்  மறைவிற்குப் பிறகு தளபதி முதலமைச்சர் ஆனார் தற்போது உதயநிதிக்கு மந்திரியாக பதவி கொடுத்து ட்ரெயினிங் கொடுத்து வருகிறார் எனவும் தெரிவித்தார் மேலும் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்குமே தவிர பிஜேபிக்கு எந்த வேலையும் கிடையாது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் திமுகவின் இரண்டு ஆண்டுகள் திட்டங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது செப்டம்பர் 15ஆம் தேதி தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் திட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் அப்போது அந்த ஆயிரம் ரூபாய் மேடையில் இருக்கும் எங்களுக்கு கிடையாது என அமைச்சர் கூறியதும் சிரிப்பலை ஏற்பட்டது பின்னர் பேசி அமைச்சர் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியதை குறிப்பிலிருந்து எடுக்க வேண்டுமென எதிர்த்து நின்று சொல்லிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.

ஆகவே இனிவரும் காலங்களில் தென்காசி மாவட்டத்திற்க்கு தேவையான அனைத்து திட்டபணிகள் நிறைவேற்றப்படும் விரைவில் மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்றார் மேலும் வருகின்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும் எனவும் அப்போது கேட்டுக் கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்,செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி,முன்னாள் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் மு.நஸீர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்...

 

Tags :

Share via